'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'மாஸ்' திரைப்படம் மே 15 அன்று ரிலீசாகவிருக்கிறது. மாஸ் படத்தில் நடித்து முடித்துவிட்டு தற்போது விக்ரம் குமார் இயக்கும் '24' படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படம் தவிர பாண்டிராஜ் இயக்கும் 'ஹைகூ' படத்திலும் நடிக்கிறார் சூர்யா! இந்த இரண்டு படங்களும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பு. இப்படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் 'சதுரங்கவேட்டை' படத்தை இயக்கிய வினோத் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சூர்யா. இந்தப் படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது. இப்படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க இருந்தது.
லிங்குசாமியின் 'திருப்பதி பிரதர்ஸ்' தயாரிப்பில் 'அஞ்சான்' படத்தில் நடித்தார் சூர்யா. அந்தப் படத்தின் தோல்வியினால் லிங்குசாமிக்கு நஷ்டம் ஏற்பட்டது. தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரிக்கட்ட, வினோத் இயக்கும் புதிய படத்தை நானே தயாரிக்கிறேன் என்று லிங்குசாமி கேட்க, பெருந்தன்மையோடு ஒப்புக்கொண்டார் சூர்யா. ஆக.. மீண்டும் 'திருப்பதி பிரதர்ஸ்' தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் சூர்யா. 24 படம் முடிவடைந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.