Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மலிவு விளம்பரத்தில் இறங்கிய கங்காரு..!

27 ஏப், 2015 - 13:01 IST
எழுத்தின் அளவு:
Cheap-publicity-of-Kangaroo-team

உயிர், சிந்து சமவெளி, மிருகம் போன்ற சர்ச்சைக்குரிய படங்களை இயக்கிய சாமி தற்போது இயக்கி உள்ள படம் கங்காரு. வர்ஷா, பிரியங்கா உடன் புதுமுக ஹீரோ நடித்துள்ள கங்காரு படம் சில தினங்களுக்கு முன் ரிலீஸ் ஆனது. சாமி ஏற்கனவே இயக்கிய படங்கள் எல்லாமே முறைதவறிய உறவுகளைப் பற்றிய படம். மற்றும் முறைதவறிய வாழ்க்கை வாழ்பவர்களைப் பற்றிய படம். எனவே அப்படங்கள் வெற்றியடையவில்லை. சாமிக்கும் கெட்ட பெயரை தேடிக் கொடுத்தது.


தன் மீது பட்ட கறையை எப்படியாவது துடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அண்ணன் தங்கை பாசத்தை வைத்து கங்காரு படத்தை இயக்கி இருக்கிறார்.


அண்ணன் தங்கை பாசக்கதை என்றால் ரசிகர்கள் படம் பார்க்க தியேட்டருக்கு வர மாட்டார்கள் என்ற அச்சம் காரணமாகவோ என்னவோ கடந்த சில நாட்களாக, ஆதி திராவிடர் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு கங்காரு படத்தை தடை செய்யக்கோருவதாக ஒரு லெட்டர்பேட் கடிதம் வாட்ஸ்அப்பில் பத்திரிகையாளர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அக்கடிதத்தை அனுப்பியவர் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் இருக்க, அந்த கடிதத்துக்கு கங்காரு படத்தின் தயாரிப்பாளர் பதில் அளித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது கங்காரு படத்தைப் பற்றி பரபரப்பான விளம்பரம் கிடைக்க தயாரிப்பாளர்கள் தரப்பில் செய்த செட்டப் போல் உள்ளதாக சீனியர் பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in