சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
அறிந்தும் அறியாமலும்,குண்டக்க மண்டக்க, பட்டியல், நர்த்தகி, ஒரு நடிகையின் வாக்குமூலம் என பல படங்களை எஸ்.ஜி.பிலிம்ஸ் சார்பில் தயாரித்தவர் புன்னகை பூ கீதா. மலேசிய தமிழரான இவர், மைந்தன் என்ற மலேசிய தமிழ் படத்தில் கதாநாயகியாகவும் நடித்தவர்.
மேலும், தான் தயாரித்த சில படங்களில் கெஸ்ட் ரோல்களில் முகம் காட்டி வந்த கீதா, தற்போது விமல் நடிப்பில் காவல் என்ற படத்தை தயாரித்திருப்பதோடு தானே நாயகியாகவும் நடித்திருக்கிறார். ஆனால், இதுவரை தன்னை தயாரிப்பாளராக வெளிப்படுத்தி வந்த புன்னகை பூ கீதா, இந்த காவல் படத்தில் தானே கதாநாயகியாகவும் நடிப்பதால் தயாரிப்பாளராக தனது பெயரை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை.