ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வெள்ளாவி அழகி டாப்சியை கோடம்பாக்கம் இதுவரை மென்மையான நடிகையாகத்தான் கருதி வந்தது. ஆனால் ராகவா லாரன்ஸ் தான் இயக்கி நடித்த காஞ்சனா-2 படத்தில் அவருக்குள் இருந்த அதிரடி நடிகையை வெளியே எடுத்து விட்டு விட்டார். விளைவு, டாப்சியா இது? என்று அவரது நடிப்பைப் பார்த்து கோலிவுட் ஆச்சர்யப்பட்டு நிற்கிறது. அதோடு, வை ராஜா வை படத்தை இயக்கியுள்ள ஐஸ்வர்யா தனுசும், காஞ்சனா-2வில் டாப்சி அதிரடியான பேயாக நடிப்பதை கேள்விப்பட்டு அவருக்கு ஒரு கெத்தான ரோலை கொடுத்திருக்கிறாராம். என்னதான் படத்தின் நாயகி ப்ரியாஆனந்த் என்றபோதும், டாப்சியின் வேடம்தான் படத்தில் தூக்கலாக உள்ளதாம்.