ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
எண்பது-தொண்ணூறுகளில் மிரட்டலான வில்லன் நடிகராக ரசிகர்களை கவர்ந்தவர் மலையாள நடிகர் பாபு ஆண்டனி. குறிப்பாக 'பூவிழி வாசலிலே', 'சூரியன்' ஆகிய படங்களில் இவரது வில்லத்தனம் மிகுந்த பாராட்டை பெற்றது. தற்போது இவரும் காலமாற்றத்தால் சில வருடங்களாகவே குணச்சித்திர நடிகராக மாறிவிட்டார்.. தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் பரவலாக நடித்து வரும் இவர், தனுஷ் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கிய தேசியவிருது பெற்ற 'காக்கா முட்டை' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
தற்போது ஹாலிவுட் படத்திலும் நடித்து தனது சாதனை எல்லையை விரிவுபடுத்தியுள்ளார் பாபு ஆண்டனி. படத்தின் பெயர் ரொம்பவே வித்தியாசமானது. அதாவது 'புல்லட்ஸ், பிளேட்ஸ் அன்ட் பிளட் (Bullets, Blades and Blood) என படத்தின் டைட்டிலே டெரர் ஏற்றுகிறது. இதில் பாபு ஆண்டனிக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். பக்கா ஆக்சன் படமாக உருவாகும் இந்தப்படத்தை வாரன் பாஸ்டர் என்பவர் இயக்குகிறார்.