'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
காக்கி சட்டைக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ரஜினி முருகன். திருப்பதி பிரதர்ஸ் சார்பில் இயக்குனர் லிங்குசாமியும், அவரது தம்பி சுபாஸ் சந்திரபோசும் தயாரிக்கிறார்கள். கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். இமான் இசை அமைக்கிறார், பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா படத்தை வெளியிடுகிறார்.
படம் வருகிற ஜூலை மாதம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. நெற்றியில் சிகப்பு ரிப்பன், கழுத்தில் கருப்பு கயிறு என ரஜினியின் புகழ்பெற்ற போஸ் போன்று பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் சிவகார்த்திகேயன் ரஜினி ரசிகராக நடிப்பது குறிப்பிடத்தக்கது. முழு நீள காமெடி படமாக இது உருவாகி வருகிறது.