நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
1984ம் ஆண்டு வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்த சாரன்ஷ் படத்தை, பெங்காலி அல்லது மராத்தி மொழியில் ரீமேக் செய்ய இயக்குநர் மகேஷ் பட் திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் எதிர்பாராதவிதமாக மரணமடையும் தன் மகனை காண அவனது பெற்றோர் படும்பாட்டை தத்ரூபமாக படம் பிடித்துக்காட்டியிருந்தது சாரன்ஷ் படம். அந்தப் படத்தில் பெற்றோர்கள் கேரக்டர்களில் அனுபம் கேரும், ரோகிணி ஹட்டன்காடியும் நடிக்காமல், அந்த கேரக்டர்களாகவே வாழ்ந்திருந்தனர். படத்தை மகேஷ் பட் இயக்கியிருந்தார். இந்நிலையில், இந்த படத்தை ரீமேக் செய்ய பாலிவுட் இயக்குநர் ஹன்சல் மேத்தா முன்வந்தார். பின் திடீரென்று இந்த முயற்சியிலிருந்து அவர் பின்வாங்கினார். இந்நிலையில், இந்த படத்தில் நடிக்க பெங்கால் சூப்பர் ஸ்டார் புரோசென்ஜித் சாட்டர்ஜி முன்வந்துள்ள நிலையில், படத்தை ரீமேக் செய்ய, மகேஷ் பட் திட்டமிட்டுள்ளார்.