வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருக்கமான நண்பரான தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன் நடிகர் மஞ்சு மனோஜுக்கும், ப்ரணதி ரெட்டிக்கும் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அடுத்த மாதம் 20 ஆம் தேதி இவர்களின் திருமணம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாட்டில் மஞ்சு குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நடிகர் மஞ்சு மனோஜுன் திருமண முகூர்த்தம் காலை 9 மணிக்கு என்பதால் இதில் கலந்து கொள்பவர்கள் மதிய விருந்து வரை காத்திருக்கமாட்டார்கள்.இதனால் மதிய திருமண விருந்தை தவிர்க்க மஞ்சு குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இதற்கு மாற்று ஏற்பாடாக காலை உணவையே விருந்து போல் செய்யும் வகையில் 50 வகையான காலை உணவுகளை காலை விருந்தில் வழங்க திருமண ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர். சென்னை,பெங்களூர், திருப்பதி, தெலுங்கானா உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும் சமையல் கலை நிபுணர்கள் திருமணத்திற்காக அழைக்கபட்டுள்ளனராம். நடிகர் மஞ்சு மனோஜின் இல்லத்தில் நடைபெறும் இந்த திருமண விழாவில் 10,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகின்றது.