'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை தனன்யா. முதல் படத்திலேயே அற்புதமாக நடித்திருந்தார். அதன்பிறகு வெயிலோடு விளையாடு என்ற படத்தில் நடித்தார். இந்தப்படம் வெளிவரவில்லை. சினிமாவில் பெரிய வாய்ப்புகள் இல்லாததால் தனது படிப்பை தொடர்ந்தார் தனன்யா. டாக்டரான தனன்யா, எம்பிபிஎஸ்., மற்றும் எம்எஸ் படித்துள்ளார். தனன்யாவின் பெற்றோர்களும் டாக்டர்கள் தான்.
இந்நிலையில் தனன்யாவுக்கு திருமணம் முடித்து வைக்க எண்ணி அவரது பெற்றோர் வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். அதன்படி சென்னையை சேர்ந்த ஆர்யன் என்பவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆர்யனும் டாக்டர் தான். இவர் சென்னையில் நரம்பியல் நிபுணராக இருக்கிறார்.
இவர்கள் இவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நிச்சயமாகி, மே மாதம் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி வருகிற மே 1ம் தேதி, உழைப்பாளர் தினத்தில், தனன்யா-ஆர்யன் திருமணம், ஆந்திர மாநிலத்தில் நடைபெற இருக்கிறது.