அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார் மற்றும் பலர் நடிப்பில் அடுத்த வெள்ளிக்கிழமையன்று வெளியாக உள்ள படம் 'உத்தம வில்லன்'. எப்போதுமே கமல்ஹாசன் படம் வெளிவருகிறதென்றால் அதைப் பற்றி பல விதமான தகவல்கள், வதந்திகள் பரவும். 'உத்தம வில்லன்' படத்தின் டிசைன்கள், சில புகைப்படங்கள் ஆகியவற்றைப் பார்த்ததுமே சிலர் இந்தப் படம் கமல்ஹாசனின் 'குணா, நம்மவர், குருதிப்புனல், ஹேராம், ஆளவந்தான், அன்பே சிவம், விருமாண்டி, மும்பை எக்ஸ்பிரஸ்,” ஆகிய படங்களின் வரிசையில் இடம் பெறும் படம் என்ற தவறான தகவலைப் பரப்பி வருகிறார்களாம். 'தெய்யம்' கலைஞர்களின் ஒப்பனையில் கமல்ஹாசன் இருக்கும் புகைப்படங்களும், டிசைன்களும் வெளிவந்ததால் அப்படி ஒரு கருத்து பரவியிருக்கிறது.
ஆனால், 'உத்தம வில்லன்' அப்படிப்பட்ட படங்களின் வரிசையில் இடம் பெறும் படமல்ல, “பஞ்ச தந்திரம், வசூல் ராஜா எம்பிபிஎஸ், தசாவதாரம்” படங்களின் வரிசையில் இடம் பெறும் படம் என படத்தைப் பார்த்த சில முக்கியமானவர்கள் கூறியிருக்கிறார்கள்.