தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்தமாதிரித்தான் படம் எடுப்பார் என மலையாள இயக்குனர் வினயனை ஒரு வட்டத்திற்குள் அடக்கிவிட முடியாது. தாய்மார்கள் கண்களை குளமாக்கும் 'காசி' மாதிரி படங்களையும் எடுப்பார். குழந்தைகளை குதூகலப்படுத்தும் 'அற்புத தீவு' போன்ற படங்களையும் எடுப்பார்.. 'ட்ராகுலா' மாதிரி பேய்ப்படங்களாகட்டும், அதிரடி போலீஸ் படங்களாகட்டும் வினயன் தொடாத ஏரியாக்களே இல்லை. ஆனால் இப்போது வினயனுக்கு சோதனையான காலகட்டம் தான்.
காரணம் தற்போது குழந்தைகளை கவரும் விதமாக 'லிட்டில் சூப்பர்மேன்' என்ற படத்தை தமிழ், மலையாளம், இந்தி என மும்மொழிப்படமாக எடுத்துள்ளார் வினயன். ஆனால் இந்தப்படத்தை கடந்த வருடம் வெளியிட முயற்சி செய்தபோது க்ளைமாக்ஸ் சர்ச்சை காரணமாக தியேட்டர்களில் இருந்து திரும்ப பெறப்பட்டது. அதோடு குழந்தைகளின் மனதை பாதிக்கும் விதமாக இருக்கிறது என்பதால் க்ளைமாக்ஸை மாற்றச்சொல்லியும் பரிந்துரைக்கப்பட்டது.
அதன்படி இப்போது க்ளைமாக்ஸ் மாற்றப்பட்டு விட்டது. அத்துடன் சிறுவர்களை கவரும் விதமாக அனகோண்டா, டைனோசார் ஆகியவற்றையும் கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தில் படத்தில் உலாவர செய்திருக்கிறாராம். இதற்காக ஹாலிவுட்டில் இருந்து கிராபிக்ஸ் கலைஞர்களை வரவழைத்து படத்தை செதுக்கியுள்ளாராம் வினயன். மேலும் சில காட்சிகளை தூக்கிவிட்டு புதிதாக படமாக்கியிருப்பதால் படத்திற்கு எக்ஸ்ட்ராவாக நான்கு கோடி வரை செலவு ஆகியிருக்கிறதாம். படம் விரைவில் வெளியாக இருக்கிறது..