ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'காக்கி சட்டை' படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் 'ரஜினி முருகன்'. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் முடிவடைந்தது. தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் வெற்றிக் கூட்டணியான சிவகார்த்திகேயன்- பொன்ராம் மீண்டும் இணைந்துள்ள 'ரஜினி முருகன்' படம் படப்பிடிப்பில் இருக்கும் போதே அனைத்து ஏரியாக்களும் விற்று புதிய சாதனையை படைத்தது.
சுமார் 40 கோடி வரை வியாபாரம் நடைபெற்றுள்ளதாகச் சொல்லப்படும் 'ரஜினி முருகன்' படத்தில் முன்னாள் தமிழ் நடிகையான மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இதுநாள் வரை இந்தப் படத்தின் ஒரு புகைப்படம் கூட வெளியிடப்படவில்லை. ஒரு சில படப்பிடிப்புப் புகைப்படங்கள் மட்டும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. 'காக்கி சட்டை' படம் மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் வசூலை முறியடித்தது என்று சொல்கிறார்கள். இப்போது 'காக்கி சட்டை' படத்தின் வசூலையும் 'ரஜினி முருகன்' முறியடிக்கும் என்று பேசிக் கொள்கிறார்கள்.
முன்னரே அறிவித்தபடி இன்று 'ரஜினி முருகன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார்கள். அடுத்து ஜுன் மாதம் 7ம் தேதி இசை வெளியீட்டையும், ஜுலை மாதம் 17ம் தேதி படத்தையும் வெளியிட உள்ளார்கள்.