Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

பெண் இயக்குனர்களாலும் சாதிக்க முடியும்: ஐஸ்வர்யா தனுஷ்

25 ஏப், 2015 - 12:43 IST
எழுத்தின் அளவு:
Women-directors-also-can-made-record-says-Aishwarya-Dhanush

3 என்ற முதல் படத்திலேயே கனமான கதை சொல்லி கவனிக்க வைத்தவர் ஐஸ்வர்யா தனுஷ். அடுத்து வை ராஜா வை என்ற பக்கா கமர்ஷியல் படத்தின் மூலம் அடுத்த அடியை எடுத்து வைத்திருக்கிறார். சூப்பர் ஸ்டாரின் மகள், சூப்பர் ஆக்டரின் மனைவி என்ற எந்த கிரீடத்தையும் தலையில் தூக்கி வைத்துக் கொள்ளாமல் இயல்பாக பேசுகிறார் ஐஸ்வர்யா...


* முதல் படத்திலேயே கொஞ்சம் வெயிட்டான விஷயம் சொன்னீங்க இதில் எப்படி?


ஒரு விஷயத்தை முதலிலேயே தெளிவாக சொல்லிவிடுகிறேன். 3 படத்திற்கும் வை ராஜா வை படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தயவு செய்து 3 படத்தை மனதில் வைத்துக் கொண்டு இந்தப் படத்திற்கு வராதீர்கள் என்று ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன். 3 அதி தீவிரமான ஒரு காதல் கதை. வை ராஜா வை பக்கா லோக்கல் கமர்ஷியல் கதை. 3 உணர வேண்டிய படம் என்றால். வை ராஜா வை துள்ளிக் குதித்து ரசிக்க வேண்டிய படம்.


* 3 படமும், வை ராஜா வையும் உளவியல் ரீதியான படம் என்கிறார்களே உண்மையா.


உண்மைதான். எனக்கு சைக்லாஜி பிடித்த சப்ஜெக்ட். அது பற்றி நிறைய படிப்பேன். அதனால் அதுபற்றிய கதைகளும் எனக்கு பிடிக்கும் வை ராஜா வையில் இன்ட்யூஷன் விஷயத்தை கையில் எடுத்திருக்கிறேன். அதை பற்றி தீவிரமாக சொல்லாமல் அதன் மேல் சுவாரஸ்யமான கதை வைத்திருக்கிறேன்.


* கவுதம், ப்ரியா ஆனந்தை எப்படி தேர்வு செய்தீர்கள்?


நான் எப்போதுமே என் கதைக்கு ஏற்றவர்களைத்தான் தேர்வு செய்வேன். இந்த கதைக்கு கவுதமும், ப்ரியா ஆனந்தும் பொருத்தமாக இருப்பார்கள் என்ற நினைத்தேன், அவர்களை நடிக்க வைத்தேன். இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் அதுவும் படத்துக்கு பிளஸ்சாக இருக்கும் என்று அவர்களை தேர்வு செய்தேன். என் எதிர்பார்ப்பை 100 சதவிகிதம் நிறைவேற்றி இருக்கிறார்கள்.


* கவுதமும், ப்ரியா ஆனந்தும் காதலிப்பதாக வரும் செய்திகள் படத்துக்கு பலம்தானே.?


அது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் படத்தில் இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருந்தது. இன்னொரு விஷயம் இது காதல் படம் அல்ல. அட்வென்ஜர் திரில்லர் வகை படம். காதல் ஒரு பகுதிதான். ஆனால் அந்த பகுதியை அழகாக்கி கொடுத்திருக்கிறார்கள்.


* பெண் இயக்குனர்கள் காமெடி படம், குடும்ப படம்தான் இயக்குவார்கள் என்ற கருத்து இருக்கிறதே?


என்னுடைய இரண்டு படங்களும் நீங்கள் சொன்ன டைப் படங்கள் அல்ல. பெண் இயக்குனர் என்பது ஸ்பெஷலாக தனித்து தெரிவதற்கு பயன்படலாமே தவிர, மற்றபடி ஆண் இயக்குனர்களை போலவே சிந்தித்தாக வேண்டும், உழைத்தாக வேண்டும். அதில் ஆண் பெண் வித்தியாசம் இல்லை. நிறைய சாதித்த பெண் இயக்குனர்களும் இருக்கிறார்கள். எங்களாலும் சாதிக்க முடியும் என்று புதிய பெண் இயக்குனர்களும் வந்து கொண்டிருக்கிறார்கள். என்னை பொருத்தவரை எல்லா படங்களையும் இயக்க கூடிய இயக்குனர் என்று பெயர் எடுத்தால் போதும்.


* தங்கை சவுந்தர்யாவும் இயக்குனராகி இருக்கிறாரே?


ரொம்ப சந்தோஷமான விஷயம். புது டெக்னிக்கை அப்பேட் பண்ணிக்கிறதுல அவளை அடிச்சுக்க முடியாது. அனிமேஷன்ல அதீத ஈடுபாடு இருக்கு. படம் இயக்குவதை பொருத்தவரை அவளுடைய பாணி வேறு, என்னுடைய பாணி வேறு.


* இரட்டை இயக்குனர்களாக இருந்து இருவரும் சேர்ந்து ஒரு படம் இயக்குவீர்களா?


ஒய் நாட்? ஏன் முடியாது அதற்கான கதையும், சூழ்நிலையும் கூடி வரும்போது நடக்கலாம்.


* அடுத்த திட்டம் என்ன?


வை ராஜா வை மே 1ந் தேதி ரிலீசாகிறது. படப்பிடிப்பு நடந்த பல மாதங்கள் குழந்தைகளை நிறைய மிஸ் பண்ணியிருக்கேன். அவர்களோட இருக்க நேரமே இல்லை. இப்போது அவுங்களுக்கு ஸ்கூல் லீவும் விட்டாச்சு. பிள்ளைகளை கூட்டிக்கிட்டு வெளிநாட்டுக்கு ஜாலியாக பறக்கப்போகிறேன். இதுதான் இப்போதைய திட்டம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in