தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இசை படத்தை இயக்கி இசையமைத்து நடித்தவர் எஸ்.ஜே.சூர்யா. அதையடுத்து சில படங்களில் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள வை ராஜா வை படத்தில் அவர் ஆட்டோ டிரைவராக வந்து ஒரு பாடலில் நடனமாடியிருக்கிறார்.
அதைப்பார்த்து, அவர் அயிட்டம் நடிகராகி விட்டதாக கோடம்பாக்கத்தில் கிண்டல் செய்து வருகிறார்கள். ஆனால், இந்த விசயம் எஸ்.ஜே.சூர்யாவின் காதுகளை எட்டியதை அடுத்து, தன்னைப்பார்த்து அயிட்டம் டான்ஸ் ஆடியிருப்பதாக கூறுபவர்களிடம். நான் ஆடியிருப்பது ஸ்பெசல் டான்ஸ் என்று அழுத்தமாக கூறி வருகிறார்.