சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
நான் படத்தின் நாயகனாக அறிமுகமான இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, அதையடுத்து நான் படத்தின் இரண்டாம் பாகமான சலீம் படத்திலும் நடித்தார். இரண்டு படங்களுமே மீடியமான வெற்றியை அடைந்தன. அதோடு, இந்த இரண்டு படங்களிலுமே கலகலப்பாக இல்லாமல் சீரியசான வேடங்களிலேயே அவர் நடித்திருந்தார்.
ஆனால், தொடர்ந்து அந்த மாதிரியான கதைகளிலேயே நடித்தால் விஜய் ஆண்டனி சீரியஸ் நடிகர் என்றொரு இமேஜ் உருவாகி விடும் என்பதற்காக, தற்போது நடித்துள்ள இந்தியா பாகிஸ்தான் படத்தில் சீரியசாக இல்லாமல், கலகலப்பான அதேசமயம் அதிகமாக பேசக்கூடிய கேரக்டரில் அவர் நடித்திருக்கிறார்.
கதைப்படி அப்படத்தில் விஜய் ஆண்டனியும் அவரது மனைவியாக நடித்திருக்கும் சுஷ்மா ராஜ் இருவருமே வழக்கறிஞர்களாம். இவர்களுக்கிடையே ஏற்படும் தொழில்முறை போட்டி காரணமாக விஜய் ஆண்டனியின் வழக்குகளை சுஷ்மாராஜ் பறித்து விடுவாராம். இப்படி அவர்களுக்கிடையே ஏற்படும் மோதல் ஒரு கட்டத்தில் காதலாகி கல்யாணம் செய்து கொள்வார்களாம்.