ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அறிமுக இயக்குநர் சுகன் கார்த்திக் இயக்கும் புதிய படம் ''மூன்றாம் உலகப்போர்''. 'பாலை' படத்தில் நடித்த சுனில் குமார் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க, 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தில் நடித்த அகிலா கிஷோர் படத்தின் கதாநாயகியாக நடிக்கின்றார். மற்றும் பல நடிகர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆர்டின் ஃப்ரேம்ஸ் மற்றும் டி.ஆர்.எஸ்ஸ் டுடியோஸ் அன்பு மற்றும் சுரேஷ் நாராயண் இப்படத்தை தயாரிக்கின்றனர்.
2025 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் நடக்கிறது. அந்த போரின் காரணம் என்ன? எந்த முடிவை நோக்கி அந்த போர் நடக்கிறது?என்பதே மூன்றாம் உலகபோர் படத்தின் கதை.
அறிமுக இயக்குனர் சுகன் கார்த்தி இப்படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவை தேவாவும், படத்தொகுப்பை எஸ்.ரிச்சர்டும் மேற்கொள்கின்றனர். வேத்ஷங்கர் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல பாடகர் ஷங்கர் மகாதேவன் ஒரு பாடலை பாடியுள்ளார். “மூன்றாம் உலகபோர்” படத்தின் டீசர் மே 1ல் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியிடு விரைவில் நடைபெறவுள்ளது.