இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
புதியவர் வினோத் இயக்கத்தில், ஒளிப்பதிவாளர் நட்டி என்ற நட்ராஜ் ஹீரோவாக நடித்து, கடந்தாண்டு வெளிவந்து, அனைவரின் பாராட்டையும் பெற்ற படம் சதுரங்க வேட்டை. மக்களை எந்தெந்த வழிகளில் ஏமாற்றுகிறார்கள் என வெளிச்சம் போட்டு காட்டிய படம் இது. வினோத்திற்கு பெரிய அடையாளத்தை கொடுத்துள்ள படம் இது. இந்தப்படத்திற்கு பிறகு வினோத்திற்கு கோலிவுட்டில் பெரிய இமேஜ் உருவாகி உள்ளது. குறிப்பாக முன்னணி ஹீரோக்கள் பலரும் வினோத்தின் இயக்கத்தில் நடிக்க ஆவலாய் இருக்கின்றனர்.
இந்நிலையில், நடிகர் சூர்யா, வினோத் இயக்கத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா தற்போது மாஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்தமாதம் வெளியாக இருக்கிறது. தொடர்ந்து ஹைக்கூ, 24 படங்களில் நடித்து வரும் சூர்யா, இந்த படங்களை முடித்த பின்னர் வினோத்தின் இயக்கத்தில் நடிப்பார் என தெரிகிறது.