பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாக்யராஜ் - பூர்ணிமா தம்பதியரின் புதல்வனான சாந்தனுவிற்கும், சின்னத்திரை பெண் தொகுப்பாளர் கீர்த்திக்கும், வரும் ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக இருவீட்டார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, இயக்குநர் பாக்யராஜ் தரப்பில் மீடியாக்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பாக்யராஜ் - பூர்ணிமா தம்பதியரின் பணிவான வணக்கம்
ஒரு இனிய நற்செய்தி. எங்க வீட்ல விசேஷங்க. ஆம்! எங்கள் புதல்வன் சாந்தனு என்கிற சோனுவுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. எங்கள் பெண் சரண்யா., சற்று பொறுத்து திருமணம் செய்துகொள்கிறேன் என்றதால், வீட்டின் முதல் திருமணம் சாந்தனுவுக்கு நடக்க உள்ளது.
பெண்ணின் வீட்டாரும், நமது கலைக்குடும்பத்தை சேர்ந்தவர்களே. பிரபல நடன இயக்குநர் ஜெயந்தி - விஜயகுமார் தம்பதியரின் கீர்த்தியே மணப்பெண். ஆகஸ்ட் 21ம் நாள், கோவிலில் திருமணமும் 22ம் நாள் வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்வும் நடைபெற உள்ளது. விரைவில் அழைப்பிதழுடன், முறைப்படி அனைவரையும் அழைக்க உள்ளோம்.
தங்கள் அனைவரது நல்லாசிகளாலும், எங்களது திரைப்பயணம் இன்னும் இனிதே தொடர்கின்றது. அதற்கு நெஞ்சார்ந்த நன்றி கூறி எங்களது பிள்ளைகளுக்கும் அந்த நல்லாசியை தந்தருள வேண்டுகிறேன்....