பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'ஓ காதல் கண்மணி' படம் மிகவும் 'கிளாஸ்' ஆக அமைந்து 'ஏ' சென்டர்களில் அமோகமான வசூலை அள்ளி வருவதாக கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். இளம் ரசிகர்களின் வரவேற்பை அதிகமாகப் பெற்றுள்ள இந்தப் படம் அமெரிக்காவிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் வாரத்தை வெற்றிகரமாகக் கடந்த இந்தப் படம் இரண்டாவது வார நாட்களிலும் நல்ல வசூலை அள்ளியுள்ளது.
கடந்த வாரம் படம் வெளியான முதல் நான்கு நாட்களில் இப்படம் 4,66,564 அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. அதன் பின் இந்த வாரத்தின் நாட்களிலும் நல்ல வசூல் அமைந்து இதுவரை 5,20,084 அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. இந்த வசூல் மூலம் அமெரிக்க தமிழ்ப் பட வசூல் வரலாற்றில் தற்போது 9வது இடத்தை 'ஓ காதல் கண்மணி' பிடித்துள்ளது. 'என்னை அறிந்தால்' படத்தின் அமெரிக்க வசூலை இப்படம் முந்திவிட்டது. இந்த வார இறுதியிலும் படத்திற்கு நல்ல வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
இதன் மூலம் மேலும் சில படங்களை இந்தப் படம் பின்னுக்குத் தள்ளிவிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.