Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

எத்தனை பேரைத்தான் காதலிக்கிறது: கவுதம் கார்த்திக் பேட்டி!

24 ஏப், 2015 - 14:17 IST
எழுத்தின் அளவு:
How-many-members-can-i-love---Gautham-Karthick-special-interview

கடல், என்னமோ ஏதோ படங்களுக்கு பிறகு தேவை ஒரு கட்டாய வெற்றி என்ற நிலையில் இருக்கிறார் கவுதம் கார்த்திக். வை ராஜா வை, சிப்பாய், இந்திரஜித், ரங்கூன் என அடுத்தடுத்து அவரது படங்கள் வெளிவர இருக்கிறது. வருகிற மே 1ம் தேதி வெளிவருகிறது ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி உள்ள வை ராஜா வை. தொடக்கம் சின்ன சறுக்கலாக இருந்தாலும் கண்கள் நிறைய நம்பிக்கையுடன் பேசுகிறார் கவுதம்...


* வை ராஜா வை படத்தில் என்ன கேரக்டர்?


இது ஒரு சிக்கலான கதை. அட்வென்ஜர் த்ரில்லர். அதனால் கதை பற்றி பேச இயக்குனர் பர்மிஷன் தரவில்லை. ஐ.டி.ல வேலை செய்கிற பையன், பெயர் கார்த்திக். அமைதியான அவனோட வாழ்க்கையில ஒரு சின்ன விஷயம் பெருசா விளையாண்டு பார்க்குது. பக்கா கமர்ஷியல் படமா வந்திருக்கு.


* ஐஸ்வர்யாவுடன் பணியாற்றிய அனுபவம்?


எல்லா விஷயத்துலேயும் டீட்டெய்லும், பர்பெக்ஷனும் எதிர்பார்ப்பாங்க. டைம் கீப்அப் பண்ணும். அடுத்த சீன் என்னங்றது பத்தி தீவிரமாக யோசிப்பாங்க. யோசிச்சதை ஸ்கீரீன்ல கொண்டு வர நிறைய மெனக்கெடுவாங்க. ஒரு நிமிஷத்தைகூட வீணாக்க மாட்டாங்க, பெண் இயக்குனர்கள்னா இப்படித்தான் படம் எடுப்பாங்க என்கிற இமேஜை உடைத்து, பக்கா கமர்ஷியல் டைரக்டரா தன்னை அடையாளம் காட்டுவாங்க. அவுங்களோட எல்லா வேலையும் டிபரெண்டா இருக்கும், ஸ்பெஷலாக இருக்கும்.


* அப்பாவோட ரீ-என்ட்ரியை எப்படி பார்க்குறீங்க?


இன்னும் அதே சுறுசுறுப்போட இருக்கார். அவர் வயசுல நானெல்லாம் கண்டிப்பா அப்படி இருக்கவே மாட்டேன். அவரோட ரீ-என்ட்ரிக்கு கிடைச்சிருக்கும் ரெஸ்பான்ஸ் பார்த்துட்டு மிரண்டுவிட்டேன். தொடர்ந்து நடிக்கிறதுக்கு பிளான் வச்சிருக்கார்.


* அப்பாவோடு இணைந்து நடிப்பீர்களா?


இப்போதைக்கு அப்படி எந்த ஐடியாவும் இல்லை. அவரோட நடிக்கிறதுக்கு நான் இன்னும் என்னோட தகுதியை வளர்த்துக்கணும். அவரோட நடிக்கிறதுக்கு சரியான கதை அமையணும். பியூச்சர்ல நடக்கலாம்.


* கடல், என்னமோ ஏதோ சரியாக போகாததுல வருத்தம் இல்லையா?


நான் என்னோட உழைப்பை சரியா கொடுத்திருக்கேன். இப்போ இல்ல எப்போ கேட்டாலும் என்னோட கேரியர்ல கடல் படத்துக்கு தனி இடம் இருக்கும். இரண்டுமே நல்ல படங்கள்தான்ங்றது எந்த மாற்று கருத்தும் இல்லை. மற்றபடி படத்தோட வெற்றி தோல்வி, வியாபார விஷயங்கள் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. மணிசார் படம் மூலமாக நான் சினிமாவுக்கு வந்ததே பெரிய வெற்றிதான்னு நினைக்கிறேன்.


* ப்ரியா ஆனந்துடன் நடித்த அனுபவம் எப்படி?


ரொம்ப ஜாலியானவங்க. சினிமாவுக்கு முன்னாடி இருந்தே அவர் எங்க பேமிலி பிரண்டு. படத்துல எங்க லவ் கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க்அவுட் ஆகியிருக்கு. அதுகுக்கு காரணமே நாங்க திக் பிரண்டுங்றதாலதான்.


* ப்ரியா ஆனந்தும், நீங்களும் தீவிரமாக காதலிக்கிறதா செய்தி வந்துகிட்டிருக்கே?


கடல் படத்துல நடிச்சப்போ துளசி கூட வந்துச்சு, சிப்பாய்ல நடிக்கிறப்போ லட்சுமி மேனன் கூட வந்துச்சு. இப்போ ப்ரியா ஆனந்த் கூட. எத்தனை பேரை லவ் பண்றது சொல்லுங்க. சரி நடிக்கிற படத்துக்கு ஃப்ரீ பப்ளிசிட்டின்னு நினைச்சுக்க வேண்டியதுதான்.


* இப்போ பைக் ரைடிங் போறீங்களா?


முன்னாடியெல்லாம் வீக்கெண்டுல பிரண்ட்சுங்களோட பெங்களூரு, ஊட்டி, கொடைக்கானல்னு கிளம்பிடுவேன். இப்போ ரொம்ப மிஸ் பண்றேன். ஆனாலும் டைம் கிடைக்கிறப்போது வண்டிய ஸ்டார்ட் பண்ணிடுறேன்.


* சினிமா நட்பு வட்டாரம் பற்றி...?


என்னோட பிரண்ட்ஸ் சர்க்கிள் பெருசு. ஆனால் இப்போது அவுங்களை ரொம்ப மிஸ் பண்றேன். ஸ்கூல் டைம் பிரண்ட்சுங்க கூட இப்பவும் என்னோட இருக்காங்க. மற்றபடி பார்ட்டி, பங்ஷன்னு கூட்டிட்டு போறவங்க ரொம்ப குறைவு.


* அடுத்த படங்கள் பற்றி...?


இந்திரஜித், பேண்டசி த்ரில்லர் படம். ஜாலியான கேரக்டர். படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. ரங்கூன் படப்பிடிப்பு நடந்துகிட்டிருக்கு. இது த்ரில்லர் கதை. கல்லூரி மாணவனாக நடிக்கிறேன். சிப்பாய் அடுத்து ரிலீசாகுது. இந்த வருடம் எனக்கு ஸ்பெஷலான வருடமாக இருக்கப்போகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in