ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
உயிர், சிந்து சமவெளி, மிருகம் படங்களை இயக்கிய சாமி தற்போது இயக்கி உள்ள படம் கங்காரு. வி ஹவுஸ் புரொடக்ஷன் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். புதுமுகம் அர்ஜுனாவுடன் ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். இது அண்ணன் தங்கை பாசத்தை பற்றிய படம். தங்கை மீது வெறித்தனமான பாசம் கொண்ட அண்ணன் சைக்கோவாக மாறுகிற சைக்காலஜிக்கல் த்ரில்லர்.
இன்று (ஏப் 24) படம் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் படத்தை தடை செய்ய வேண்டும் என்று எஸ்.சிவகுமார் என்பவர் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். படத்தில் வரம்பு மீறிய உறவுகள் குறித்து காட்சிகள் இருப்பதாகவும், இது தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக உள்ளதாகவும், பல வக்கிர காட்சிகள் இருப்பதாகவும் சிவகுமார் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது. படமும் இன்று வெளிவருகிறது.