பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா மற்றும் நடிகை ராதிகா ஆப்தே நடித்துள்ள லயன் படம் மே 1 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கபடிருந்த நிலையில், தற்போது அப்படத்தின் வியாபாரத்தில் புதிய பிரச்சனை எழுந்துள்ளது. இயக்குநர் சத்யதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை, தயாரிப்பாளர் ருத்ரபதி ரமணா ராவ் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பிரமாண்டமாக தயாரித்திருந்தார். இப்படத்தின் தயாரிப்பு செலவு 25 கோடி என தகவல் வெளிவந்தது. ஆனால் இப்படத்தை விற்பனை செய்யும்போது 10 கோடி அதிகரித்து 35 கோடி என விநியோகஸ்தர்களிடம் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இதனால் விநியோகஸ்தர்கள் இப்படத்தை வாங்க விருப்பம் தெரிவிக்கவில்லை எனவும் தகவல் வெளிவந்துள்ளது. இதன் காரணமாக படத்தின் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்படத்தின் வெளியீடு மே இரண்டாம் வாரத்திற்கு ஒத்தி வைக்கபடுள்ளதாம். மேலும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இன்னும் நிறைவடையாததும் இப்படத்தின் தாமதத்திற்கு காரணம் என தகவல் கசிந்துள்ளது.