‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாரதிராஜா இயக்கிய அன்னக்கொடியும் கொடி வீரனும் என்ற படத்தில் அன்னக்கொடியாக நடித்தவர் கார்த்திகா. படம் பெரிய எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால், படம் பொய்த்து விட்டது. அதற்கு பிறகு கார்த்திகா அதிக படங்களில் நடிக்கவில்லை. தற்போது வாடீல், புறம்போக்கு போன்ற படங்களில் நடித்துள்ளார். படம் திரைக்கு வர உள்ளன. இந்த சூழலில் நான் படம் நடிக்காமல் ஒதுங்கி இருக்கவில்லை. நல்ல படங்கள் வந்தால் நடிப்பேன். அப்படித்தான் இப்போது நடித்துள்ள படங்கள் அமைந்தன. இனி வரும் காலங்களில் இப்படித்தான் நடிப்பேன் என்கிறார் ராதா மகள் கார்த்திகா. இவரிடம் முதல்மரியாதை படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக ராதா நடித்திருந்தார். அதே போல இப்போது பாரதிராஜா வயதான தோற்றத்தில் நடித்தால் அவருக்கு ஜோடியாக நடிப்பீர்களா என்று கேட்டதற்கு டபுள் ஓகே இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் ரொம்பவும் மகிழ்வேன் என்கிறார் கார்த்திகா.