டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலைய்யாவின் 100வது படத்தை தயாரிக்கப்போவது யார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது. பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் அந்த படத்தை தயாரிக்க போட்டி போட்டன. ஆனால் அந்த படத்தை பாலைய்யா தனது குடும்பத்தயாரிப்பாக கொடுக்க முடிவு செய்து விட்டார். அவரின் அண்ணன் மகனும், பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான நந்தமூரி கல்யாண் ராம் தான் அந்த படத்தின் தயாரிப்பாளராம். இந்த படத்தை நந்தமூரி கல்யாண் ராம் தனது, என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார்.
பாலைய்யாவின் 100வது படம் அவருடைய வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாகும். அந்த படத்திற்கு சரித்திரகொக்கடு என பெயர் வைத்து இருப்பதாக தெரிகிறது. அந்த படத்தை தனது தந்தையும், தலைசிறந்த நடிகரும், மறைந்த முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவுக்கு காணிக்கையாக்க வேண்டும் என்பதால் தான் தனது அண்ணன் மகனை தயாரிக்க சொல்லியதாக தெரிகிறது. தற்போது பாலைய்யா லயன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அந்த படம் விரைவில் வெளிவர உள்ளது. அந்த படத்தை அறிமுக இயக்குனரான சத்யதேவ் இயக்குகிறார். பிரபல நடிகையான திரிஷா மற்றும் ராதிகா ஆப்டே ஆகியோர் பாலைய்யாவுக்கு ஜோடியாக நடிக்கின்றனர்.