ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான விக்ரம் பிரபு, தொடர்ந்து இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு போன்ற படங்களில் நடித்தவர், சமீபத்தில் வௌ்ளக்கார துரை படத்தில் நடித்திருந்தார். இவர் நடித்த படங்கள் எல்லாம் ஓரளவுக்கு வெற்றி பெற்றது. தற்போது விஜய் இயக்கத்தில் இது என்ன மாயம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வௌிவர இருக்கிறது. இதற்கு அடுத்தப்படியாக ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் வாகா என்ற படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த இரண்டு படங்களை தொடர்ந்து மஞ்சப்பை இயக்குநர் நவீன் ராகவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப்படத்திற்கு தனிகாட்டு ராஜா என்று பெயர் வைத்துள்ளனர். இது 1982ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வௌியான படத்தின் தலைப்பாகும். முற்றிலும் கமர்ஷியல் படமாக உருவாக இருக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க இருக்கிறார் என்பது படத்திற்கு பெரிய பலம்.