‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
2015ம் வருடத்தில் உலகின் மிக அழகான் பெண்ணாக பிரபல ஹாலிவுட் நடிகை சாண்ட்ரா புல்லக் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அமெரிக்காவில் நியுயார்க் நகரில் இருந்து வெளிவரும் " பியூப்பிள் " வார இதழ் இவரை தேர்ந்தெடுத்திருக்கிறது. பலருடைய பெயர்கள் அழகான பெண்கள் பட்டியலில் இருந்தும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
50 வயதான சாண்ட்ரா, அழகான பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து அவரிடம் கேட்டபோது, " இது மிகவும் கேலியாக இருக்கிறது. உண்மையான அழகு அமைதியில் இருக்கிறது. நாம் அவரைப் போல் இருக்க வேண்டும். இவரை போல் இருக்க வேண்டும் என்று விரும்புவது இயற்கை தான் என்றாலும், அப்படி எண்ணாமல், நல்ல மனிதராக இருங்கள். நல்ல அம்மாவாக இருங்கள். நல்லவற்றை செய்யுங்கள். என்னைப் பொறுத்த வரையில் அழகாக இருக்க முயற்றி செய்யாதவர்களே அழகாக தெரிகிறார்கள் " என்றார்.
ஆஸ்கார் விருது பெற்ற சாண்ட்ரா, கிராவிட்டி, த பிளைன்ட் சைட், கிராஷ், ஸ்பீட் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருக்கு 5 வயதில் லூயிஸ் என்ற மகன் இருக்கிறான்.