பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அழகான பெண்கள் என்ன சொன்னாலும் அதைக் கேட்டுக் கொள்வதுதான் பலரின் வழக்கமாக இருக்கும். ஹன்சிகா போன்ற அழகான பெண்கள் அழகைப் பற்றிப் பேசும் போது கேட்காமல் இருப்போமோ. ஹன்சிகாவின் பார்வையில் அழகு என்னால் என்ன தெரியுமா ?, “அழகாக இருப்பது என்பது ஒரு கலை, அதில் நான் தேர்ந்தவளாக இருப்பது பெருமை,” என நம்பிக்கையுடன் சொல்கிறார் ஹன்சிகா.
மேலும் அவர் கூறுகையில்,“என்னுடைய ரசிகர்கள் நான் அழுது நடிப்பதை விரும்பவில்லை. என்னுடைய அழகான தோற்றத்தையும், ஜாலியான நடிப்பையும்தான் அவர்கள் பார்க்க விரும்புகிறார்கள். படத்துக்குப் படம் அவர்களுக்காகவே என்னை அழகாக காட்டிக் கொள்ள நான் விரும்புகிறேன். அவர்கள் என்னைப் பாராட்டும் போது நான் மிதக்க ஆரம்பித்து விடுகிறேன். என ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைத்தான் நானும் விரும்புகிறேன்.
சிறுவயதிலிருந்தே என்னுடைய குடும்பத்தினர் என்னை மகாராணியாகவே பார்த்துக் கொள்கிறார்கள். படப்பிடிப்புக்குப் போனாலும் என்னை அது மாதிரியே கவனித்துக் கொள்கிறார்கள்,” எனப் பெருமையாகச் சொல்கிறார் 'புலி' படத்தின் இளவரசி ஹன்சிகா.