ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
2007ல் கற்றது தமிழ் படத்தை இயக்கியவர் ராம். அதையடுத்து 6 ஆண்டுகள் கழித்து தங்க மீன்கள் என்ற படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்தார். அந்த படத்திற்கு சிறந்த படத்துக்கான தேசிய விருது கிடைத்தது. மேலும், அப்பா-மகளின் பாசத்தை மையமாக வைத்து உருவான அப்படம் ராமிற்கு சினிமா மட்டுமின்றி ரசிகர்கள் வட்டாரத்திலும் நல்லதொரு இமேஜை ஏற்படுத்திக்கொடுத்தது.
இந்த நிலையில், தனது அடுத்த படத்தை இன்னும் சிறப்பாக கொடுக்க வேண்டும் என்பதால் தற்போது தரமணி என்ற படத்தை இயக்கி கொண்டிருக்கிறார் ராம். இப்போது வரை கிட்டத்தட்ட 80 சதவிகிதம் படத்தை முடித்து விட்டாராம்.
மேலும், தற்போது சென்னை திருவான்மியூரை அடுத்துள்ள ஸ்லம் ஏரியாவில் மழையில் நடப்பது போன்ற சில காட்சிகளை அவர் படமாக்கிக்கொண்டிருக்கிறார். சில நாட்களில் விடிய விடியகூட படப்பிடிப்பு நடக்கிறது. அப்படி ஒவ்வொரு நாளும் 6 லாரி தண்ணீர் வரை அந்த காட்சிகளுக்காக செலவிடப்படுகிறதாம். சின்னச்சின்ன கேரக்டர்கள்கூட சிறப்பாக நடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ராம், அதற்காக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செலவு செய்கிறாராம். அதோடு, கதாபாத்திரங்களுக்கேற்ற நடிகர் நடிகைகளை தேடிப்பிடித்து கிடைக்கிற வரைக்கும் பொறுமையாக காத்திருந்தும் படப்பிடிப்பை நடத்துகிறாராம்.