இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நான், சலீம் படங்களை அடுத்து விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் இந்தியா - பாகிஸ்தான். அதையடுத்து சசி இயக்கத்தில் பிச்சைக்காரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வரும் இப்படத்துக்காக தனது கெட்டப்பையும் வழக்கத்தில் இருந்து மாற்றி நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி.
மேலும், இந்த படத்தில் அவர் எந்த மாதிரியான கேரக்டரில் நடிக்கிறார் என்பதை ரொம்ப சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள். ஆனபோதும் தற்போது மெல்ல மெல்ல சில தகவல்கள் காத்துவாக்கில் கசியத் தொடங்கியுள்ளன. அதில், விஜய் ஆண்டனி ஒரு பீட்சா வியாபாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பீட்சா படத்தில் விஜயசேதுபதி பீட்சா கடையில் வேலை செய்து கொண்டு, வீடுகளில் இருந்து ஆர்டர் வருவதையும் பைக்கில் கொண்டு சென்று கொடுக்கும் வேடத்தில் நடித்தார். அந்த படம் மெகா ஹிட்டானது. அதனால்தானோ என்னவோ செண்டிமென்ட் கருதி இப்படியொரு வேடத்தில் விஜய் ஆண்டனியை நடிக்க வைத்திருக்கிறாராம் சசி. அதோடு, பிச்சைக்காரன் என்றால், பணம் இல்லாதவர்கள் மட்டுமே இல்லையாம். அதற்கு சசி குறிப்பிடும் மனிதர்களே வேறாம்.
ஆக, சொல்லாமலே, ரோஜாக்கூட்டம், டிஷ்யூம், பூ என படத்துக்குப்படம் வித்தியாசமான கருத்துக்களை சொன்ன சசி, இந்த பிச்சைக்காரனில் அதிலிருந்து இன்னும் பலபடி உயர்ந்து மாறுபட்ட கதைக்களத்தில் பிச்சைக்காரனை இயக்கி வருகிறாராம்.