'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இப்போது 'பெங்களூர் டேய்ஸ்' படம் தமிழில் ரீமேக்காகிறது இல்லையா..? அந்தப்படத்தை பொறுத்தவரை நஸ்ரியாவின் உயிரோட்டமான துறுதுறு நடிப்பும், விதவிதமான எக்ஸ்பிரசன்களும் தான் அந்த கேரக்டரை தாங்கி பிடித்தன. ஆனால் கொடுமை என்னவென்றால் மலையாளத்தில் நஸ்ரியா நடித்த கேரக்டரில், இங்கே நடிப்பவர் ஸ்ரீதிவ்யா. இவரது முதல் படத்தை தவிர்த்து ஜீவா, வெள்ளைக்கார துரை, காக்கி சட்டை என மற்ற மூன்று படங்களிலும் கிட்டத்தட்ட ஒரேவிதமான எக்ஸ்பிரசன்களோடு ஒரு பொம்மை போலத்தான் வந்து போனார். இவரை எப்படி நஸ்ரியாவின் கேரக்டருக்கு செலக்ட் பண்ணினார்கள் என பலரும் ஆச்சர்யப்படுகிறார்கள்.
ஆனால் அதேசமயம் இந்தப்படம் தெலுங்கிலும் ரீமேக் ஆகிறது தானே..? அந்தப்படத்தை தெலுங்கில் இயக்கும் ஸ்ரீராம், நித்யா மேனனை அணுகி, பெங்களூர் டேய்ஸ் ஒரிஜினலில் நித்யா மேனன் நடித்திருந்த கேரக்டரையே தெலுங்கிலும் பண்ணுமாறு கூறியுள்ளார். ஆனால் நித்யா மேனன் அதை மறுத்துவிட்டு, நஸ்ரியா நடித்த துறுதுறு கேரக்டரை தனக்கு தரும்படி கேட்டு வாங்கிக்கொண்டார்.