ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையுலகில் 2000க்கு முன் முன்னணி நடிகைகளில் முக்கியமானவராக இருந்தவர் ஜோதிகா. சிம்ரனுக்கும் அவருக்கும்தான் அப்போது பலத்த போட்டி இருக்கும். ஜோதிகா நடித்த பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஜோதிகா நடித்துள்ளார். ஆனால், அவர் அப்போதெல்லாம் மீடியாக்களுடன் சகஜமாகப் பழகாமல் தள்ளியே இருப்பார். பத்திரிகையாளர்களும் அவரை எளிதில் அணுக முடியாது. அதற்குக் காரணம் அவருடைய மானேஜர் என அப்போதே பல பத்திரிகையாளர்கள் குறைபட்டுக் கொள்வார்கள். எந்த ஒரு டிவிக்கும் ஜோதிகா பேட்டி கொடுக்க மாட்டார். மீடியாக்கள் தன்னை நெருங்காமல் ஒரு வட்டம் போட்டுக் கொண்டு அதற்குள்ளேயே இருந்தார்.
இப்போது காலம் மாறிவிட்டது, ஒரு படத்தை ஓட வைப்பதற்கு மீடியாக்களின் துணையும் அதிகம் தேவைப்படுகிறது. அந்த மாற்றம் ஜோதிகவிடமும் இப்போது வந்துவிட்டது. திருமணத்திற்குப் பிறகு இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது '36 வயதினிலே' படத்தில் நாயகியாக ஜோதிகா நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் இசை வெளியீடு நடந்த போது சரளமான தமிழில் பேசி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார் ஜோதிகா. இவர் இவ்வளவு அழகாக தமிழ் பேசுவாரா என்று பலரும் அப்போது ஆச்சரியப்பட்டார்கள். '36 வயதினிலே' படம் விரைவில் வெளிவர உள்ளதால், இப்போதே படத்திற்கான பிரமோஷன் வேலைகளை ஆரம்பித்துவிட்டார்கள். அதிகமாக டிவிக்களுக்குப் பேட்டி கொடுக்காத ஜோதிகா இப்போது அதையும் செய்ய ஆரம்பித்துவிட்டார். ஆனால், குறிப்பிட்ட சில தொலைக்காட்சிகளுக்கு, மட்டும்தான் பேட்டி தருகிறார் என்று சிலர் குறைபட்டுக் கொள்கிறார்கள்.
எப்படியோ காலம் எல்லாரிடமும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்து விடுகிறது, அதற்கு ஜோதிகாவும் விதிவிலக்கல்ல.