'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
மதுரைக்கும், சினிமாவுக்கும் அப்படி என்ன பூர்வஜென்ம தொடர்போ தெரியவில்லை, நான்கு படங்களில் ஒன்று மதுரையை கதை களமாக கொண்டிருக்கிறது. ரத்தமும், சதையுமாக படம் எடுக்கணுமா கிளம்பு மதுரைக்கு என்று கிளம்பி விடுகிறார்கள். அப்படி ஒரு படமாக புதியவர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது மதுரை மாவேந்தர்கள் என்ற படம், நேற்று இன்று, இரவும் பகலும் படங்களை வெளியிட்ட எஸ்.தணிகைவேல் தயாரிக்கிறார்.
மதுரையை சேர்ந்த நடுத்தர குடும்பத்து தந்தை ஒருவர் தன் மகள் திருமணத்திற்காக தனது பூர்வீக வீட்டை ஒரு அரசியல்வாதியிடம் அடமானம் வைத்து மகள் திருமணத்தை நடத்துகிறார். மகன் சம்பாதித்து வீட்டை திருப்ப வரும்போதுதான் தெரிகிறது. அரசியல்வாதி வீட்டை விலைக்கு வாங்கிவிட்டதாக போலி பத்திரம் தயார் செய்து வீட்டை கட்சி ஆபீசாக மாற்றியிருப்பது தெரிகிறது. சக்தி வாய்ந்த அந்த அரசியல்வாதியிடமிருந்த வீட்டை மகன் எப்படி மீட்கிறான் என்பதுதான் கதை.
அஜய், அர்ச்சனா என்ற புதுமுகங்களுடன், அப்புக்குட்டி, காதல் சுகுமார், தேவதர்ஷினி, விஜய் ஆனந்த் நடித்துள்ளனர். எஸ்.கார்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார், பைஜு ஜேக்கப் இசை அமைத்துள்ளார் வி.கே.விஜய் கண்ணா இயக்கி உள்ளார். மதுரையிலேயே படப்பிடிப்புகள் முடிந்துள்ளது.