பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
விஜய்யின் புலி படத்தில் ஏற்கனவே ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகிய முன்னணி நடிகைகள் நடிக்க தற்போது திடீரென்று நந்திதாவும் அந்த படத்தில் கமிட்டானார். அதனால், அப்படத்தில் அவர் மூன்றாவது ஹீரோயினியாக நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் புலி வட்டாரத்தை விசாரித்தால், அப்படத்தில் அவருக்கு ஹீரோயினி வேடம் கிடையாது. ஒரு ரெண்டு சீனில் மட்டுமே வருகிறார். அந்தவகையில் அவர் கெஸ்ட் ரோலில்தான் நடித்திருக்கிறார் என்கிறார்கள்.
அதோடு, சமீபகாலமாக முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் மட்டுமே நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் நந்திதா, விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு இருந்து வந்ததால்தான் இந்த படத்தில் மறுக்காமல் நடித்தாராம். மற்றபடி சிறிய ஹீரோக்களின் படங்களில் இந்த மாதிரி யாராவது நடிக்க அழைத்தால் கண்டிப்பாக நடிக்க மாட்டாராம். எது எப்படியோ விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்ற நந்திதாவின் ஆசையை புலி படம் நிறைவேற்றி வைத்து விட்டது.
அது மட்டுமின்றி, தான் நடித்து முடித்து விட்டு விடைபெறும்போது விஜய்யுடன் நின்று சில போட்டோக்களையும் எடுத்துக்கொண்டாராம் நந்திதா. அந்தவகையில், விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பது மட்டுமின்றி, அவருடன் போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதும் நந்திதாவின் நீண்டநாள் ஆசைதானாம். ஆக, புலி நந்திதாவின் இரண்டு ஆசைகளை நிறைவேற்றி வைத்திருக்கிறது.