தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜயசேதுபதி-நயன்தாரா இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்து வரும் படம் நானும் ரெளடிதான். தனுஷ் தயாரித்து வரும் இப்படம் கடந்த சில மாதங்களாகவே நடந்து கொண்டிருக்கிறது . தற்போது விஜயசேதுபதி- நயன்தாரா இரண்டு பேருமே பல படங்களில் பிசியாக நடித்து வருபவர்கள் என்பதால், அவர்களின் கால்சீட் கிடைக்கும்போதெல்லாம் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். அந்த வகையில், தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி விட்டதாக சொல்கிறார்கள். மேலும், இந்த படத்தில் கதைப்படி ஆரம்பத்தில் விஜயசேதுபதி, நயன்தாராவின் கேரக்டர்கள் எதிரும் புதிருமாகவே அமைக்கப்பட்டுள்ளதாம். அதனால் அவர்களுக்கிடையே அவ்வப்போது மோதல் வெடிக்க, தனது சார்பில் சில ரவுடிகளை செட் பண்ணி விஜயசேதுபதியை அடிக்க அனுப்புவாராம். இந்த காட்சியில் இறுதியில் நயன்தாரா அனுப்பி வைத்த ஆட்களை விஜயசேதுபதி அடித்து துவம்சம் செய்து அனுப்பி விடுவாராம்.
அதோடு, தன்னை அடிக்க ஆள் அனுப்பியது நயன்தாராதான் என்பதை தெரிந்து கொள்ளும் அவர், நானும் ரவுடிதாம்மா. எங்கிட்ட மோதுற வேலையெல்லாம் வேண்டாம் என்று போனில் மிரட்டல் விடுவாராம். இப்படி மோதல் ஏற்படும் அவர்களுக்கிடையேதான் ஒரு கட்டத்தில் மோதலே காதலை உருவாக்கி விடுமாம். இப்படியொரு காட்சியைதான் சமீபத்தில் படமாக்கியிருக்கிறார்கள்.