Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பரத்தை மலையாளத்திற்கு இழுக்கும் '1000 ; 7000' நம்பர் பிசினஸ்..!

21 ஏப், 2015 - 15:25 IST
எழுத்தின் அளவு:
Bharath-in-malayalam-movie

நடிகர் பரத்துக்கும் மலையாள சினிமாவுக்கும் 11 வருட கால பந்தம் இப்போதும் விடாமல் தொடர்கிறது. இதுதவிர கடந்த 2௦௦014லேயே பரத் '4 ஸ்டூடண்ட்ஸ்' என்ற மலையாளப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் அடுத்ததாக மோகன்லாலுடன் இணைந்து பரத் நடித்த 'கூதரா' என்கிற படம் கடந்த மே மாதம் தான் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது. பரத் மலையாளத்திற்கு வருவதற்கு காரணங்கள் ஆயிரம் இருந்தாலும் இப்போது '1௦௦௦'மும் ஒரு காரணமாக அமைந்திருக்கிறது.


ஆம்.. மலையாளத்தில் தற்போது லேட்டஸ்ட்டாக பரத் நடித்துவரும் படங்களும் ஆயிரங்களையே டைட்டிலாக கொண்டுள்ளது தான் ஆச்சர்யமான விஷயம். அதில் ஒரு படத்தின் பெயர்தான் '1௦௦௦ - ஒரு நோட்டு பறஞ்ச கத'. அதாவது ஆயிரம் ரூபாய் நோட்டை மையப்படுத்தி இந்தப்படத்தின் கதை பின்னப்பட்டுள்ளதாம். ஏ.ஆர்.சி.நாயர் இயக்கத்தில் சஸ்பென்ஸ் படமாக உருவானாலும் படத்தில் காமெடியும் பிரதானமாக இருக்குமாம். பரத்துடன் மக்பூல் சல்மான், பியான் என இன்னும் இரண்டு ஹீரோக்களும் நடிக்கிறார்கள்.


இதுதவிர அனில் ராதாகிருஷ்ணன் மேனன் இயக்கும் 'லார்ட் லிவிங்ஸ்டோன் 7௦௦௦ கண்டி' என்கிற படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் பரத். இந்தப்படத்தின் கதாநாயகனாக நடிப்பவர் குஞ்சாக்கோ போபன். இன்னொரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் சன்னி வெய்ன். இவரும் பரத்தும் ஏற்கனவே 'கூதரா' என்கிற படத்தில் இணைந்து நடித்தவர்கள் தான். இந்தப்படத்தில் முதலில் ஷாம் நடிப்பதாக சொல்லப்பட்ட கேரக்டரில் தான் இப்போது பரத் நடிக்க இருக்கிறார் என்று தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in