'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கோலிவுட், டோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை காஜல் அகர்வாலின் பட வாய்ப்புகள் தற்போது குறையத் தொடங்கியுள்ளன. இதனால் அவரது திருமணம் குறித்த வதந்திகள் அடிக்கடி வருகின்றன. தனது திருமணம் குறித்து நடிகை காஜல் அகர்வால் கூறுகையில், தன்னைவிட மூத்த நடிகைகளான அனுஷ்கா, நயன்தாரா, த்ரிஷா ஆகியோர் திருமண பந்தத்தில் இணைந்த பின்னர் தான், தானும் திருமண பந்தத்தில் இணைவது குறித்து யோசிப்பேன் என்று கூறியுள்ளார். அதுவரை திரைபடங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தப் போவதாக கூறியுள்ள காஜல், திருமணம் குறித்து ஒரு அவசரமும் இல்லை. மேலும் தனக்கேற்ற இணையான துணையை இன்னும் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளார். நடிகை காஜல் அகர்வாலை விட வயதில் குறைந்த அவரது தங்கை நிஷா அகர்வால், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை காஜல் தற்போது நடிகர் விஷாலுக்கு ஜோடியாக பாயும் புலி படத்தில் நடித்து வருகின்றார்.