Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெலுங்கிலிருந்து, கன்னடத்தில் நிலை கொண்டுள்ள இளமை புயல் அடா சர்மா

21 ஏப், 2015 - 10:06 IST
எழுத்தின் அளவு:
Adah-sharma-got-success-in-Kannada-film-also

இந்தி நடிகை அடா சர்மா, தெலுங்கு தரையில் அறிமுகான படத்திலேயே, அப்படத்தின் தலைபிற்கேற்ற வகையில் தனது அழகால் இளைஞர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரச் செய்தார். இந்தியில் பல படங்களில் மும்முரமாக நடித்து வந்த அடா சர்மாவை பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் தெலுங்கு தரையில் தனது ஹார்ட் அட்டாக் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். முதல் படத்திலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற அடா சர்மா, அதனைத் தொடர்ந்து அண்மையில் திரைக்கு வந்த S/O சத்யமூர்த்தி படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் நாயகன் அல்லு அர்ஜுனுடன் முத்தக்காட்சியிலும் துணிச்சலாக நடித்த அடா சர்மா, தற்போது கன்னட திரை உலகிலும் நுழைந்து வெற்றி பெற்றுள்ளார். கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நடிப்பில் வெளிவந்த தீரா ரான் விக்ரமா படத்தில் அவருக்கு ஜோடியாக அடா சர்மா நடித்துள்ளார். இப்படம் கன்னட திரை உலகில் வசூலில் சாதனை படைத்து வருகின்றதாம். இயக்குனர் பவன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் ஒன்பது நாட்களில் 30 கோடி வசூலித்ததாக கன்னட திரை உலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கன்னடத்திலும் முதல் படம் வெற்றி அடைந்ததால் நடிகை அடா சர்மா ஏக குஷியில் இருகின்றாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in