டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாண்டியநாடு படத்தை அடுத்து விஷால்-சுசீந்திரன் கூட்டணி இணைந்திருக்கும் படம் பாயும் புலி. கார்த்தியை வைத்து நான் மகான் அல்ல என்று ரஜினி பட டைட்டிலை வைத்து ஏற்கனவே ஒரு படத்தை இயக்கிய சுசீந்திரன், இரண்டாவது முறையாக மீண்டும் ரஜினி பட டைட்டிலை வைத்து இந்த பாயும்புலி படத்தை இயக்கி வருகிறார்.
மேலும், பாண்டியநாடு படத்தைப்போன்று இந்த படத்தையும் மதுரை கதைக்களத்தில் இறக்கும் அவர், முந்தையமுறை மதுரை கிராமத்து மண்வாசணையில் எடுத்தவர், இந்த படத்தை மதுரை கதை என்றாலும் மதுரை நகரத்து பின்னணியில் இயக்குகிறார். அதோடு போலீஸ் கெட்டப்பில் விஷால் நடிக்கும் இந்த படத்தில் ரவுடிகளை அவர் வேட்டையாடும் காட்சிகளில் இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமான முறையில் படமாக்கப்படு கிறதாம்.