'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
குறும்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிகிதா. அதனைத்தொடர்ந்து வெற்றிவேல் சக்திவேல், சத்ரபதி போன்ற படங்களில் நடித்தவருக்கு அதன்பின் ஹீரோயின் வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் கன்னட சினிமா பக்கம் சென்றவர் அங்கு சில படங்களில் நடித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு வெங்கட்பிரபு இயக்கிய, ''சரோஜா'' படத்தில், ''கோடாண கோடி...'' என சம்பத் உடன் கவர்ச்சி குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கிறங்கடிக்க செய்தார். அதன்பின் கார்த்தியின், ''அலெக்ஸ் பாண்டியன்'' படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார்.
இந்நிலையில், இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் குத்தாட்டம் போட வந்துள்ளார் நிகிதா. பாண்டிய நாடு படத்திற்கு பிறகு விஷால்-சுசீந்திரன் மீண்டும் இணையும் பாயும் புலி படத்தில் தான் நிகிதா குத்தாட்டம் போட இருக்கிறார். இந்தபாடலும் சரோஜா படத்தில் இடம்பெற்றுள்ள, ''கோடாண கோடி'' பாடல் போன்று செம ஹாட்டாக இருக்கும் என்கிறார்கள்.