ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
திரையுலகின் அழகு பதுமையாக உள்ள நடிகை தமன்னா, தற்போது நகை வர்த்தகத்திலும் களமிறங்கி உள்ளார்.
அக்ஷய திரிதியை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று தமன்னா, Witengold.com என்ற இணையதளத்தின் மூலம் நகை வர்த்தகத்தை, தமன்னா கோலாகலமாக துவங்கியுள்ளார்.
திரையுலகில், முன்னணி நடிகையாக உள்ள தமன்னா பாட்டியா, தனது தந்தை சந்தோஷ் பாட்டியாவின் உதவியுடன், இணையதள நகை வர்த்தகத்தை துவக்கியுள்ளார்.
இதுகுறித்து தமன்னா கூறியதாவது, இன்றைய நவநாகரீக பெண்களின் மனஓட்டத்தை கருத்தில் கொண்டு புதுப்புது விதமான நகைகளை, எங்களது இணையதள வர்த்தகத்தின் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். எனது இந்த முயற்சிக்கு, அப்பா மிகுந்த உதவியாக இருந்தார். பண்டிகைக்காலங்களில், அதன் தன்மைக்கு ஏற்ப, புதுப்புது விதமான நகைகளை அறிமுகப்படுத்த உள்ளோம் என்று தமன்னா கூறினார்.
Witengold.com இணையதளத்தின் மூலம் விற்பனை செய்யப்பட உள்ள நகைள், நடிகை தமன்னாவின் கைவண்ணத்தில் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.