'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
“நாணயம், நாய்கள் ஜாக்கிரதை” ஆகிய படங்களை இயக்கிய சக்தி ராஜன் இயக்கும் புதிய படம் ஒன்றில் ஜெயம் ரவி, லட்சுமி மேனன் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார்கள். இந்தப் படத்திற்கு இன்னும் பெயரிடவில்லை. ஜெயம் ரவி தற்போது, “அப்பா டக்கர், ரோமியோ ஜுலியட், தனியொருவன்” ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்போது சக்தி ராஜன் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க உள்ளார். 'கொம்பன்' பட வெளியீட்டிற்குப் பிறகு எந்த புதுப் படத்தையும் ஒப்பந்தம் செய்யாமல் இருந்த லட்சுமி மேனன் தற்போது இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். பிளஸ் டூ பரீட்சையை எழுதி முடித்து விட்டதால், இனி படங்களில் தொடர்ந்து நடிக்கப் போவதாக லட்சுமி மேனன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.