‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கண்ணெதிரே தோன்றினாள். மஜ்னு, சந்தித்தவேளை படங்களை இயக்கிய ரவிச்சந்திரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி உள்ள படம் ''நட்பதிகாரம் 79''. இதில் தேஜஸ்வி மடிவாடா மற்றும் ரேஷ்மி மேனன் ஹீரோயினாக நடித்துள்ளனர். ரேஷ்மி மேனன் இனிது இனிது படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார். தேஜஸ்வி தெலுங்கில் இருந்து தமிழுக்கு அறிமுகமாகிறார்.
தெலுங்கில் ஹிட்டான சீத்தம்மா பிரிசல்லே ஸ்ரீமலே சிட்டு என்ற படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தார். அதில் அவரை பார்த்து விட்டு ராம்கோபால் வர்மா தனது ஐஸ்கிரீம் படத்தில் நடிக்க வைத்தார். இரண்டாவது படத்திலேயே படுக்கையறை காட்சி, படு கிளாமரான காட்சிகளில் அதிர வைத்தார். தற்போது சில தெலுங்கு படங்களில் நடித்து வரும் தேஜஸ்வி அதே வேகத்தில் தமிழுக்கு வருகிறார். நட்பதிகாரம் படத்திலும் அளவான கிளாமரில் நடித்துள்ளார். படத்தில் இடம் பெறும் ஷைலா ஓ ஷைலா என்ற பாடலில் ஹீரோ ராஜ்பரத்துடன் கிக்கான ஆட்டம் போட்டிருக்கிறார். தெலுங்கிலிருந்து தமிழுக்கு ஒரு கவர்ச்சி வரவு தேஜஸ்வி.