ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் சங்கத் தேர்தலில், தலைவர் பதவிக்கு நடிகர் சிவகுமாரை போட்டியிட வைக்க விஷால் தரப்பினர், பேச்சு நடத்தி வருகின்றனர். அவருக்காக ஆதரவு திரட்டவும் திட்டமிட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக, தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக சரத்குமாரும், பொதுச்செயலராக ராதாரவியும், பொருளாளராக வாகை சந்திரசேகரும் உள்ளனர். சங்கத்திற்கு, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய, மே அல்லது ஜூன் முதல் வாரத்தில் தேர்தல் நடக்க உள்ளது.
இந்தத் தேர்தலில் மீண்டும் போட்டியிட, சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் தீவிரமாக உள்ளனர். மூவரும் தனித்தனியாக ஓட்டு வேட்டையும் நடத்தி வருகின்றனர். ஆனால், நடிகர் சங்க கட்டடம் கட்டும் விவகாரத்தில், தற்போதைய நிர்வாகிகள் மீது அதிருப்தியில் உள்ள நடிகர் விஷால் மற்றும் அவரது ஆதரவு நடிகர்கள் சிலர், வரும் தேர்தலில், தலைவர் பதவிக்கு நடிகர் சிவகுமாரை முன் நிறுத்தவும், மற்ற பதவிகளுக்கு, தங்களின் ஆதரவாளர்களை நிறுத்தவும் தீர்மானித்து உள்ளனர்.