Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிக்கலில் இருந்து மீண்ட ஸ்ருதிஹாசன்...வழக்கை வாபஸ் பெற்ற பட நிறுவனம்...

20 ஏப், 2015 - 12:47 IST
எழுத்தின் அளவு:
Srutihassan-gets-relief-from-court-case

நான் ஈ, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் உட்ப பல வெற்றிப்படங்களைத் தயாரித்த பட நிறுவனம் - பிவிபி. இதன் இன்னொரு பெயர் 'பிக்சர் ஹவுஸ் மீடியா'.


இந்த நிறுவனம் கார்த்தி, நாகார்ஜுனா இருவரையும் நடிக்க வைத்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரு படத்தை தயாரித்து வருகிறது.


இப்படத்திற்கு ஹைதராபாத்திலும் பிறகு சென்னையிலும் என இரண்டுமுறை பூஜைகள் நடைபெற்றன. கார்த்திக்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்த ஸ்ருதிஹாசன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கால்ஷீட்டையும் கொடுத்த பிறகு திடீரென இப்படத்திலிருந்து விலகினார். கார்த்தி படத்துக்குக் கொடுத்த தேதிகளை புலி படத்திற்கு ஒதுக்கிவிட்டதால் படத்திலிருந்து விலகியதாக தகவல் வெளியானது. விஜய்யுடன் புலி படத்திலும் அதையடுத்து அஜித்துக்கு ஜோடியாக தல 56 படத்திலும் நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன். இந்தநிலையில் கார்த்தி உடன் நடித்தால் உன்னுடைய இமேஜ் பாதிக்கும் என்று அவரது நலம்விரும்பிகள் அட்வைஸ் செய்தனராம்.


எனவேதான் அந்தப் படத்திலிருந்து விலகினார் என்று தகவல் வெளியானது. படத்திலிருந்து விலகியதால் 'பிக்சர் ஹவுஸ் மீடியா' நிறுவனம் ஸ்ருதிஹாசன் மீது ஹைதராபாத் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ருதிஹாஸன் புதிய படங்களில் நடிக்க தடைவிதித்தார். சில தினங்களுக்கு முன் தன் மீதான தடையை விலக்கும்படி கோர்ட்டில் மனு செய்தார் ஸ்ருதி! இந்நிலையில் தென் இந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் 'கலைப்புலி' எஸ்.தாணு, மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் 'பிக்சர் ஹவுஸ் மீடியா' நிர்வாகத்தினரிடம் பேசினர். அதைத்தொடர்ந்து ஸ்ருதி ஹாசன் மீது தொடரப்பட்டிருந்த வழக்கை 'பிக்சர் ஹவுஸ் மீடியா' நிறுவனம் வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து ஸ்ருதி ஹாசன் இனி புதுப்படங்களில் நடிக்க தடை இருக்காது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in