'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பாடலாசிரியரான கருணாகரன் ஒரு மாற்றுத் திறனாளி. இப்படி குறிப்பிடுவது அவரை குறைத்து மதிப்பிடுவதற்காக அல்ல. நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்களையே உதாசீனப்படுத்தும் சினிமாவில் போராடி ஜெயித்துக் கொண்டிருக்கும் கருணாகரனை பாராட்டும் நோக்கத்தில்தான். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்த வல்லவன் படத்தில் அறிமுகமான கருணாகரன் கையில் இப்போது 30 படங்கள் இருக்கிறது.
அலெக்ஸ் பாண்டியன் படத்தில் இடம்பெற்ற பேட் பாய்ஸ், டமால் டுமீல் படத்தில் உஷா உதுப் பாடிய டுமீலு, பாடல்கள் ஹிட்டானது. தகராறு, கடவுள் பாதி மிருகம் பாதி, சேர்ந்து போலாமா பாடல்கள் சமீபத்தில் வெளிவந்தவை. முன்பு ஒவ்வொரு அலுவலகமாக சக்கர நாற்காலியில் வாய்ப்பு தேடித் தேடிபோன கருணாகரனுக்கு இப்போது வாய்ப்புகள் தேடி வருகிறது. "நல்ல பாடல்களை எழுதி ஜனாதிபதி கையால் ஒரு தேசிய விருதை வாங்கிவிட்டால் என் பிறப்பின் பலனை அடைந்து விடுவேன்" என்கிறார் கருணாகரன்.