ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு |
சென்னையில் உள்ள சென்னை டர்ன்ஸ் பிங்க் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் பெண்களுக்கான மார்பக புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு விளம்பரம் படம் ஒன்றை தயாரித்துள்ளனர். இதனை நர்த்தகி பட இயக்குனர் விஜயபத்மா இயக்கி உள்ளார். இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
படத்தை வெளியிட்டு நடிகை ஸ்ரேயா ரெட்டி பேசியதாவது: மார்பக புற்றுநோய் பற்றி நம் பெண்களிடம் சரியான விழிப்புணர்வு இல்லை ,சில பெண்கள் பற்றிய நிலைமைகள் அதிர்ச்சி தரும்படி உள்ளன. இந்த நோய் தரும் சவாலை சந்திக்க அஞ்சக் கூடாது. திருமணம் ஆனவர், ஆகாதவர் என்றில்லை எல்லாரும் இந்த மார்பகப்புற்றுநோய் சோதனை செய்யவேண்டும். அதில் தப்பில்லை. தயங்கக் கூடாது. என்றார்.
நிகழ்ச்சியில் சென்னை டர்ன்ஸ் பிங்க் அமைப்பின் விளம்பரத்தூதர்கள் சௌமியா அன்புமணி, நீரஜா மாலிக், லட்சுமி ராகவேந்தர், ஹாரதி கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர் முன்னதாக அமைப்பின் நிறுவன தலைவர் ஆனந்த குமார் வரவேற்றார். முடிவில் செயலாளர் ரௌனக் நன்றி கூறினார்.