பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தெலுங்கு திரையில் வளர்ந்து வரும் நடிகையான அடா சர்மா இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு திரைப்படமான ஹார்ட் அட்டாக் படத்தில் நடிகை அடா சர்மாவிற்கு ரசிகர்கள் கொடுத்த பேராதரவு, அவரை தெலுங்கு திரையில் கவனம் செலுத்த தூண்டியுள்ளது. அப்படத்தைத் தொடர்ந்து ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடிகை சமந்தா நடித்த S/O சத்யமூர்த்தி, படத்தில் அடா சர்மா ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
இப்படத்தில் நடித்து குறித்து அடா சர்மா கூறுகையில், நடிகர் அல்லு அர்ஜுனின் நடிப்பு தன்னை மிகவும் கவர்ந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் பல படங்களில் இணைந்து தான் பணியாற்ற ஆர்வமாக இருப்பதாகவும் அடா சர்மா கூறியுள்ளார். அடா சர்மா, அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்த S/O சத்யமூர்த்தி படம் விமர்சகர்களிடம் அடி வாங்கினாலும் வசூலில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.