அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் ஜோடி சேர்ந்த ஆர்யா-நயன்தாரா இருவரும் பின்னர் தல அஜித் நடித்த ஆரம்பம் படத்தில் நடித்தனர். ஆனால் அந்த படத்தில் அஜித்துக்குத்தான் ஜோடியாக நடித்தார் நயன்தாரா. அதையடுத்து, ராஜா ராணியில் ஆர்யா-நயன்தாரா இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்தனர்.
அதையடுத்து, பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகமான, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்திலும் நயன்தாராவையே நடிக்க வைக்க ஆசைப்பட்டார் ஆர்யா. ஆனால் அவரோ, கைவசம் அரை டஜன் படங்களுக்குமேல் இருப்பதால் இப்போது கால்சீட் தருவது சாத்தியமில்லை என்று தட்டிக்கழித்து விட்டார். அதனால், வேறு வழியில்லாமல் தமன்னா பக்கம் சாய்ந்தார் ஆர்யா. இருப்பினும், மீண்டும் நயன்தாராவுடன் நடிக்கும் ஆர்வம் அவருக்கு ஏற்பட்டிருப்பதால், மதராசப் பட்டினம் படத்தை அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தான் நடிக்கும் படத்தில் நயன்தாராவுடன் டூயட் பாடியே தீருவது என்ற முடிவில் இருக்கும் ஆர்யா, தொடர்ந்து நயன்தாராவிடம் கால்சீட் கேட்டு வருகிறாராம். ஆனால், இப்போதும் அதே கால்சீட் பிரச்சினையைதான் முன் வைத்திருக்கிறாராம் நயன்தாரா.