கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
நம்ம ஊரில் ரஜினியும், கமலும் இணைந்து சுமார் பத்து படங்களில் நடித்திருப்பார்களா..? ஆனால் அங்கே கேரளாவில் மோகன்லால், மம்முட்டி என இரண்டு சூப்பர்ஸ்டார்களும் இணைந்து இத்தனை வருடங்களில் 55 படங்களில் நடித்துவிட்டார்கள். சொல்லப்போனால் உலக சினிமாவிலேயே இது ஒரு அதிசயமான நிகழ்வுதான். நல்ல கதை அமைந்தால் இரண்டு பேரும் எந்தவித ஈகோவுமில்லாமல் நடிக்க ஒப்புக்கொள்கிறார்கள். சில நேரங்களில் ஒருவர் படத்தில் மற்றவர் கெஸ்ட் ரோலில் கூட நடித்துவிட்டு போகிறார்கள்..
கடைசியாக இரண்டு வருடங்களுக்கு முன் மம்முட்டி நடித்த 'கடல் கடந்நு ஒரு மாத்துக்குட்டி' படத்தில் மோகன்லால், நடிகர் மோகன்லால் ஆகவே கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். ஆனாலும் இவர்கள் இருவருக்குமே சம அளவு வெயிட் கொடுத்து கடைசியாக வெளியான படம் எட்டு வருடங்களுக்கு முன் ஜோஷி இயக்கத்தில் உருவான 'ட்வெண்டி 20' படம் தான். அதன்பின் அப்படி ஒரு கதை இருவருக்கும் அமையவில்லை.
தற்போது இந்த இருவரையும் இணைக்கும் முயற்சியில் இயக்குனர் பிரியதர்ஷன் ஒரு பக்கமும், இயக்குனர்கள் ஷாஜி கைலாஷ் - ரஞ்சித் - ரெஞ்சி பணிக்கர் கூட்டணி இன்னொரு பக்கமும் தயாராகி வருகிறார்கள். இதில் இரண்டாவதாக உள்ள மூவர் கூட்டணிக்கே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது. யார் இயக்கினாலும் மோகன்லால் - மம்முட்டி இணையும் 56வது படம் என்பது கேரள நன்நாட்டின் உற்சவம் போலத்தான்.