தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கமல்ஹாசன் நடித்துள்ள மூன்று படங்களான உத்தம வில்லன், பாபநாசம், விஸ்வரூபம் 2 ஆகிய படங்கள் அடுத்தடுத்து வர உள்ள நிலையில், அடுத்து நடிக்கும் புதிய படத்தின் வேலைகளில் கமல்ஹாசன் ஏற்கெனவே இறங்கிவிட்டார். அந்தப் புதிய படத்திற்காக லொகேஷன் பார்க்கும் வேலைகளை அவர் முடித்து விட்டார் என்றும் சொல்கிறார்கள். அதற்காக அவர் மொரீஷியஸ் நாட்டிற்கும் சென்று வந்துள்ளார்.
இந்தப் புதிய படத்திற்கு ஓர் இரவு என்று பெயர் வைத்துள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ் இதற்கு முன் இணைந்து நடித்துள்ள வசூல்ராஜா எம்பிபிஎஸ், வேட்டையாடு விளையாடு ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன.
இந்தப் படத்தின் கதை ஒரு இரவில் நடைபெறும் கதை என்றும் அதனால்தான் ஒரு இரவு எனப் பெயர் வைத்திருக்கிறாராம் கமல். படத்தில் கண்டிப்பாக ஆன்ட்ரியாவும், பூஜா குமாரும் மட்டும் ஜோடியாக நடிக்க மாட்டார்கள் என எதிர்பார்க்கலாம்.